ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட 44 பேரின் அன்டியன் பரிசோதனை முடிவுகள் வெளியாகின.

சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்டு ஆசிரியர், அதிபர்கள் தொழிற்சங்கங்களினால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 44 பேர் நேற்று (04) கைது செய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 44 பேரும் உடனடி என்டிஜன் பரிசோதனைக்கு நேற்று உட்படுத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 44 பேருக்கும் கொரோனா பரிசோதனையின் முடிவுகள் நெகடிவ் ஆக வந்துள்ளமையால் இவர்கள் அனைவரும் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.