கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கோக்ரா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிடுக்கும் படைகளை முழுமையாக திரும்பப் பெற இணக்கம் ஏற்பட்டுள்ளது.
இதற்கமைவாக படைகளை விலக்கிக்கொள்வது குறித்து இந்திய – சீன இராணுவ அதிகாரிகள் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளன.
மேலும் இது குறித்த விடயம் தொடர்பில் இராணுவ அதிகாரி ஒருவர் கருத்து கூறுகயில்,
இரு நாட்டு இராணுவ அதிகாரிகள் அளவில் இடம்பெற்ரா பேச்சுவார்த்தைகயில் லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் கோக்ரா இராணுவ ரோந்து பகுதி உள்ளிட்ட பகுதிகளில் இரு நாடுகள் சார்பிலும் நிறுத்தப்பட்டிருக்கும் படைகளை முழுமையாக திரும்பப்பெற உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடடார் .