வேதனை பிரச்சினைகள் உள்ளிட்ட தமது கோரிக்கைகளை உடனடியாகவே நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிட்டு நான்கு பகுதிகளில் இருந்து வாகன பேரணிகள் இன்று
கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இதற்கமைய குறித்த வாகன பேரணி நீர்கொழும்பு வீதியின் வெலிசரை, கண்டி வீதியின் கடவத்த அதிவேக வீதி நுழைவாயில், அத்துடன் ஹை லெவல் வீதியின் கொட்டாவை, காலி வீதியில் மொரட்டுவை ஆகிய பகுதிகளிலேயே ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன் இவ்வாறு இடம்பெறும் பேரணி கொழும்பு ஜனாதிபதி செயலகத்தை வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நேற்றைய தினம் கல்வி அமைச்சர் ஜி, எல் பீரிஸ்க்கும் அதிபர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலும் எந்தவொரு இணக்கப்பாடு எட்டப்படவில்லை.
இதன் பிரகாரம் தமது தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொ