சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியினை வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது.

நாட்டிலுள்ள சகல அரசு மருத்துவமனைகளிலும் கொவிட் 19 தொற்றாளர்கள் அனுமதிக்கப்படுவது தற்போது அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் குறித்த வைத்தியசாலைகளில் பாரியளவிலான நெருக்கடிகள் ஏற்பட்டு இருப்பதாகவும் இது குறித்து நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தை சுகாதார அமைச்சர் தலைமையில் நடக்கும் படியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்திருந்தார்.

அத்துடன் நாடாளுமன்றில் இன்றைய தினம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்நிலையில் குறித்த கோரிக்கைக்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சரும் , சபை முதல்வருமான தினேஷ் குணவர்த்தன , இன்றைய தினத்தில் அரசாங்கம் இந்த விடயத்திற்கு பதில் வழங்கும் என்று கூறியுள்ளார்.