நாட்டில் பால்மாவிற்கு தட்டுப்பாடா? – வெளியான காரணம்.

இலங்கையில் பால்மா இல்லாமை ஏற்படுமா என கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அதற்கு வாய்ப்பில்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்

நாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான அந்நிய செலாவணி இருப்பு அரசாங்கத்திடமுள்ளது. எனவே இது தொடர்பில் அநாவசிய பேச்சு ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்றார்.

நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் குறியுள்ளார் .