நாளை முதல் 60 வயதிற்கு மேற்பட்டோரிற்கு கொவிட் தடுப்பூசிகள்

நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் வகையில், கட்டம் கட்டமாக தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், கொழும்பு மாவட்டத்தின் 5 இடங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை காலை 8.30 மணி முதல் சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸினை பெற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தவகையில், கொழும்பு தேசிய வைத்தியசாலை, கலுபோவில போதனா வைத்தியசாலை, கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலை, அவிசாவளை மாவட்ட வைத்தியசாலை மற்றும் விஹாரமஹாதேவி பூங்கா ஆகிய இடங்களில் சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் என இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்