பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கி, அவர் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளி.

நேற்றையதினம், கிரிஉல்ல – புஸ்கொலதெனிய பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொற்றாளர் ஒருவரின் வீட்டிற்கு பணிக்காக சென்றிருந்த, பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கி, அவர் மீது எச்சில் துப்பிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

48 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதேவேளை, பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு இடையூறு விளைவிப்பது தண்டிக்கத்தக்க விடயம் என்றும், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்த அவர், இதேபோன்றதொரு சம்பவம் முன்னர் இடம்பெற்றிருந்ததையும் சுட்டிக்காட்டினார்.