போராட்த்தை கட்டுப்படுத்த முயன்ற பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த சோக நிலை.

நேற்றையதினம் பாராளுமன்றம் அருகே இடபெற்ற போராட்டத்தை கட்டுப்படுத்த முயற்சித்த மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பலத்த காயமடைந்ததாக குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, போராட்டக்காரர்கள் பொலிஸாரின் கட்டைளையை மீறி வீதித்தடைகளை தகர்த்து முன்னோக்கி செல்ல முற்பட்ட வேலையில் அவர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு கூறி நேற்று ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் பொலிஸாருக்கும் நடுவில் பதற்றமான நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது