மீண்டும் நாடு முடக்கப்படுமா?

நாட்டில் நிலவும் நிலையினை கருத்திற் கொண்டு தேவைகள் ஏற்பட்டால் மாத்திரமே நாட்டை அல்லது நாட்டின் பகுதிகளை முடக்குவது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கமைய குறித்த விடயத்தை இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்திருந்தார்.

அத்துடன் நாட்டில் கொரோனவைரஸ் பரவலானது தீவிரமடைந்து வருகின்றமையை குறித்து ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி விஜயரட்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் அதற்கு பதிலளித்த ராஜாங்க அமைச்சர் எந்த ஒரு தீர்மானமாக இருந்தாலும் அவை தேவைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார்.