முல்லைத்தீவில் அமைக்கப்படவிருக்கும் பல்கலைக்கழகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்றொழில் தொடர்பான கற்கை நெறிகளுக்கான தனியான பீடம் ஒன்றினை அமைப்பதட்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடிவித்துள்ளார்

அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வவுனியா பல்கலைக்கழகம் தொடர்பில் கருத்து தேரிவிக்கயில் அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வவுனியா பல்கலைக்கமானது அறிவுசார்ந்து சிந்தித்து எதிர்காலத்தை முன்னகர்த்தும் சந்ததியை உருவாக்கும் அறிவுக்கூடமாக மிளிர வேண்டும் எனவும், வவுனியா வளாகத்தை இந்த நிலைக்கு உயர்த்த அல்லது பங்களித்த அனைவருக்கும் தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.