மழை குறைந்துள்ளதன் காரணத்தால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய அந்த அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரின் அளவு படிப்படியாக குறைந்து வந்து தற்போது 6 ஆயிரம் கன அடி மாத்திரம் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணத்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.
நேற்றைய தினத்தில் 6 ஆயிரத்து 690 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 6 ஆயிரத்து 308 கன அடியாக வந்து கொண்டிருக்கின்றது.
அத்துடன் அந்த அணையில் இருந்து காவிரியில் 14 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் என மொத்தமாக 14 ஆயிரத்து 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் மேலும் சரிந்து 80.49 அடியானது.
கடந்த 3 நாட்களில் மாத்திரம் மேட்டூர் நீர்மட்டம் இரண்டு அடி சரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.