ஆண்ட்ரியாவை கஷ்டப்படுத்தி விட்டேன்… பிரபல இயக்குனர்

0
830

மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த பிசாசு படம் நல்ல வரவேற்பை பெற்றது. அவர் தற்போது பிசாசு படத்தின் 2ம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஆண்ட்ரியா நாயகியாக நடிக்கிறார். பூர்ணா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

இதுகுறித்து மிஷ்கின் கூறியிருப்பதாவது: பிசாசு படத்தில் பிசாசு தான் முக்கிய கேரக்டர். அதுபோல இந்த படத்திலும் பிசாசு தான் முக்கிய கேரக்டர். அதில் அன்பு, பாசம், கருணை, சின்னதாக ஒரு மெசேஜ் இருப்பது போன்று இதிலும் இருக்கும், மற்றபடி இரண்டு படங்களுக்கும் வேறெந்த தொடர்பு இல்லை. அது வேறு கதை, இது வேறு கதை.

ஆண்ட்ரியாவின் கேரியரில் இது முக்கியமான படமாக இருக்கும். அந்த அளவிற்கு மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். நான் அவரை கஷ்டப்படுத்தியிருக்கேன் என்றும் சொல்லலாம். இது பெரியவர்களுக்கான திகில் படம்தான். படம் பயமுறுத்தத்தான் செய்யும் என்றார்.