உலகளவில் 17.33 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

0
431

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிவிட்டது. சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் தணியவில்லை. எனினும், உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், உலகளவில் 17.33 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 37.27 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 15.62 கோடி பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்.

அமெரிக்காவில் புதிதாக 16,672 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 515 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவில் மொத்தம் 3.41 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6,12,204 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.