யாழில் 84 பேர் உட்பட வடக்கில் மேலும் 130 பேருக்கு கோவிட் தொற்று.

0
370

வட மாகாணத்தில் மேலும் 130 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடம், யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் போன்றவற்றில் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ள்பட்டுள்ளன.

இதன்போதே குறித்த தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய யாழ்.மாவட்டத்தில் 84 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் இப்போது கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கையும், மரணங்களும் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடபட்டுள்ளது