சமூக ஊடகங்களில் பல போலியான தகவல்கள் – காவற்துரையினர் அதிரடி விசாரணையில்!

0
372

கொழும்பு நகரின் சில இடங்களை குறிவைத்து குண்டு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தற்போது சமூக ஊடகங்களில் பல போலியான தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய வெள்ளவத்தை, தெஹிவளை, நுகெகோட, கல்கிசை மற்றும் நிதி மிரிஹாணை போன்ற பகுதிகளிலேயே குறித்த தாக்குதல் நடத்தப்படவிருப்பதாக போலியான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் கல்கிசை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.