யாழ் பருத்தித்துறை கிளையின் தேசிய சேமிப்பு வங்கியினை மூடுமாறு அறிவுறுத்தல்!

0
375

யாழ் பருத்தித்துறை கிளையின் தேசிய சேமிப்பு வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கொவிட் வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்படுள்ளது.

இந்நிலையில் குறித்த கிளையில் பணியாற்றும் அனைவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதனால் வங்கியின் பருத்தித்துறை கிளை மாற்று நடவடிக்கை வரை மூடுமாறு சுகாதார மருத்துவ அதிகாரியினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய சேமிப்பு வங்கியின் பருத்தித்துறை கிளையின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவருக்கு கொவிட் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டதாக இன்று முற்பகல் அறிவிக்கப்பட்டது.

மேலும் தேசிய சேமிப்பு வங்கியின் பருத்தித்துறை கிளையில் பணியாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களையும் 14 நாள்களுக்கு சுயதனிமைப்படுத்த சுகாதார மருத்துவ அதிகாரியினால் அறிவுறுத்தப்பட்டது.