இன்றும் சுகததாஸ விளையாட்டு அரங்கில் தடுப்பூசி!

0
379

கொழும்பிலுள்ள மக்களுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இன்றைய தினமும் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதற்கமைய 30 வயதிற்கு மேற்பட்ட எந்தவொரு கொவிட் தடுப்பூசியேனும் செலுத்தி கொள்ளாத கொழும்பில் வசிக்கும் மக்களுக்காக தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு சுகததாஸ உள்ளக விளையாட்டு அரங்கில் முன்னெடுக்கப்படுகின்றது.

மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் குறித்த பகுதிக்குச் சென்று முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியும் என காவல்துறை பேச்சாளர் சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரோஹன தெரிவித்துள்ளார்