35 பெண்களை பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 1088 ஆண்டுகள் சிறை

0
377

தென்னாப்பிரிக்காவில் 35-க்கு மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 33 வயது குற்றவாளிக்கு 1088 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 முதல் 2019 வரையில் செல்லோ அப்ரம் மாபுன்யா என்ற அந்த கொடூர குற்றவாளி தென்னாப்பிரிக்கா நாட்டில் சுமார் 36 வீடுகளை இரவு நேரங்களில் உடைத்து கொள்ளை அடித்துள்ளான்.

அதோடு 35 பெண்களை அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இந்த 1088 ஆண்டுகள் சிறை தண்டனை மட்டுமல்லாது 5 ஆயுள் தண்டனையும் அவனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை அந்நாட்டின் பிரிட்டோரியா உயர்நீதிமன்றம் அளித்துள்ளது.

தென்னாப்பிரிக்க நாட்டு காவல்துறை இந்த தண்டனையை வரவேற்றுள்ளது. காவல்துறை சார்பில் இந்த வழக்கை விசாரித்து குற்றவாளி குற்றம் செய்ததற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தின் முன் சமர்பித்து தண்டனை வாங்கி கொடுத்ததற்காக விசாரணை அதிகாரி கேத்தரினுக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.