செயற்கை கருத்தரிப்பு முறை குறித்த விழிப்புணர்வு

0
630

செயற்கை முறையில் கருவுறுதல் என்பது கர்ப்பப்பையில் நேரடியாக விந்தணுக்களை செலுத்தும் சிகிச்சை முறை.பெண்ணின் கருமுட்டைகளும் ஆணின் விந்தணுக்களும் கலக்கப்பட்டு இது கருவாக உருவானதும் பெண்ணின் கர்ப்பபைக்குள் செலுத்தி விடப்படும். பிறகு கரு உருவாதல் நடைபெறுகிறது.

இந்த செயற்கை கருவூட்டல் இரண்டு முறையில் செய்யப்படுகிறது. ஒன்று ஐயூஐ. மற்றொன்று ஐசிஐ .ஐசிஐ என்பது கர்ப்பப்பை வாயில் விந்தணுக்களை செருகுவார்கள். கர்ப்பப்பைவெளியே இருக்கும் பாதை வழியே இதை செய்வார்கள். ஐயூஐ என்பது கர்ப்பப்பை வாய் கடந்து கர்ப்பப்பையில் விந்தணுக்களை செலுத்தும் முறை ஆகும். இம்முறையில் கருத்தரிப்பை பாதிக்காமல் இருக்க விந்தணுக்கள் செறிவூட்டப்பட்டு உள்செலுத்தப்படுகிறது.

பெண்ணின் சினைப்பையில் அதிக கருமுட்டைகளை உற்பத்தி செய்ய வைத்து அவை முதிர்ச்சி அடைய செய்வார்கள். பிறகு அது வெடிக்க மருந்தை ஊசி வழியாக செலுத்தி அதை வெடிக்க செய்வார்கள். அந்த முட்டையை ஊசிக்குழலில் எடுப்பார்கள். அதற்கு முன்பு ஆணின் விந்தணுக்கள் கோடிக்கணக்கில் ஐவிஎஃப் டிஷ்ஷில் வைக்கப்பட்டிருக்கும். ஊசிக்குழலில் எடுத்த கருமுட்டையை இந்த விந்தணுக்களுடன் கலப்பார்கள். 18 மணி நேரங்கள் வரை வைத்து இரண்டும் கலந்து கருத்தரிப்பு நடந்திருக்கும். பிறகு 72 மணி நேரத்தில் அந்த கரு 8 செல் நிலைக்கு வந்த பிறகு மீண்டும் ஊசிக்குழல் மூலம் பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்துவார்கள்.

தரமான விந்தணுக்களோடு கருமுட்டை இணைந்து கருவாக உருவாகிய பிறகு மீதியிருக்கும் விந்தணுக்களை சேமித்துவைப்பார்கள். ஊசிக்குழல் மூலம் பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்திய கருமுட்டை கருத்தரிக்காமல் போனால் மீண்டும் இதை கருத்தரிக்க பயன்படுத்தி கொள்வார்கள். இந்த சிகிச்சைக்கு பிறகு கரு கர்ப்பப்பையில் தங்கி இருக்க மருந்தும் மாத்திரைகளும் உண்டு.

செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொண்டதும் பெண்ணின் ரத்தத்தில் ஹெச்சிஜி அளவு அதிகரிக்கும். இதை பரிசோதனை செய்து பார்ப்பார்கள். கரு உருவாகி இருந்தால் இதன் அளவு அதிகரிக்கும். பிறகும் ஓய்வில் இருக்க சொல்லி இரண்டு வாரங்கள் கழிந்து அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்யப்படும். எனினும் இது மட்டும் கொண்டு உறுதி செய்ய முடியாது. மீண்டும் வாரங்கள் கழிந்து கருவின் இதயத்துடிப்பும் பரிசோதனை செய்யப்படும்.

கருவின் இதயத்துடிப்பு சீராக ஆரோக்கியமாக இருக்கும் நிலையில் கருத்தரிப்பு முறை வெற்றி பெற்றதாகும். எனினும் தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். இதே போன்று வேறு சிகிச்சைகளும் உண்டு. ஐசிஐ, கிஃப்ட் முறைகள். தம்பதியரின் உடல் நலன் கொண்டு உரிய சிகிச்சை முறையை மருத்துவர்களே தேர்வு செய்வார்கள்.

குழந்தைப்பேறின்மை பிரச்சனையை எதிர்கொள்ளும் தம்பதியருக்கு முதலில் அவர்களது மருத்துவ வரலாறு அறிந்து சிகிச்சையின் மூலமே கருவுறுதலுக்கான சிகிச்சை அளிக்கப்படும். அவை இயலாத நிலையில் செயற்கை கருவுறுதலுக்கு அறிவுறுத்துவார்கள்.

சிகிச்சையில் சில ஆண்களுக்கு விந்தணு பிரச்சனை தீர்க்கப்பட முடியாமல் இருந்தாலும், பெண்ணுக்கு கருமுட்டை பிரச்சனை நிவர்த்தி செய்ய முடியாமல் இருந்தாலும் இறுதியில் கருமுட்டை, விந்தணு தானம் அறிவுறுத்தப்படுகிறது.

செயற்கை முறை கருத்தரிப்பு தேவை என்பதை தம்பதியர் முடிவு செய்ய முடியாது. இந்த சிகிச்சையை மருத்துவர் தொடங்குவதற்கு முன்பு இயற்கையான முறையில் கருத்தரிக்க சிகிச்சைகள் அளிக்கப்படும். அதன் பிறகு தான் மருத்துவர் இந்த முறையை தேர்வு செய்வார்.

செயற்கை முறை கருவுறுதலின் போது பக்கவிளைவுகள் உண்டாகாது. கருத்தரித்தாலும் கருவுக்கு எவ்வித பாதிப்பும் நேராது. பெரும்பாலும் இரட்டைக்குழந்தைகள் அல்லது மூன்று குழந்தைகள் வயிற்றில் வளர வாய்ப்புண்டு.