ஆண்மை குறைபாடு பற்றிய உண்மையும் பொய்யும்

0
980

இன்றைய உலகில் ஏராளமான ஆண்கள் ஆண்மை குறைபாடு பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றனர். கோடிக்கணக்கான விந்தணுக்கள், பெண்ணுறுப்பிலிருந்து கர்ப்பப்பை நோக்கி செல்லும். இதில் துடிப்புடைய ஒரே ஒரு விந்தணு மட்டுமே முட்டையின் வெளிச்சவ்வை துளைத்து உள்ளே நுழைகின்றன.

பெண்ணுறுப்பிலிருந்து கர்ப்பபைக்கு கடந்து செல்ல வேண்டிய தூரம் 15 லிருந்து 25 செமீ ஆகும். இதன் பின்னரே கரு உருவாகிறது, சாதாரணமாக ஒரு ஆணின் ஒரு மில்லி லிட்டர் விந்தில் குறைந்தபட்சம் 4 கோடி விந்தணுக்கள் இருக்க வேண்டும். அதிக பட்சமாக 12 கோடி கூட இருக்கும். ஆனால், இந்த எண்ணிக்கையின் குறைபாட்டால் ஆண்மைக் குறைபாடுகள் ஏற்படுகின்றன.

ஆண்மை குறைபாட்டிற்கு காரணங்கள் என்ன?

அண்மையில் நடந்த ஆராய்ச்சியின்படி, சுமார் 25 சதவீதம் மன அழுத்தத்தின் காரணமாகவே இந்த ஆண்மைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அதிக மது அருந்துதல், புகை மற்றும் போதைப்பழக்கம், நீரிழிவு நோய், மனநோய்கள், இரத்த கொதிப்பு, சில நோய்களுக்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளின் பக்கவிளைவுகளால் ஆணுறுப்பு விறைப்படைகிறது.

அதிகமான வெப்பத்தால் ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது, உதாரணத்திற்கு இராசயன தொழிற்சாலையில் பணிபுரிவோருக்கும், கதிர்வீச்சுத்துறைகளில் பணிபுரிவோருக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. விந்தணு உற்பத்திக்கும், உடல் சூட்டுக்கும் தொடர்புள்ளது. உடல் சூடு அதிகரிக்கும்போது விந்தணு உற்பத்தி பாதிக்கப்படும்.

நமது உடலின் பிற பகுதிகளில் உள்ள வெப்ப நிலையை விட விந்துப் பையின் வெப்ப நிலை 5 டிகிரி குறைவாகவே இருக்கும். அதற்கேற்றபடி விந்துப் பையானது தனது வெப்ப நிலையை சரிவிகித நிலையில் வைத்துக் கொள்ளும். எனவே உடல்சூடும் ஒருவகையில் காரணமாகிறது.

ஊட்டச்சத்து குறைபாடு, சரியான உடற்பயிற்சி இன்மை, டெஸ்டோஸ்டிரன் ஹார்மோன்(Testosterone) சுரப்பு குறைபாடினாலும் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும்.

இந்த காரணங்கள் உண்மையாதா?

மன அழுத்தம் ஒருவகையில் காரணமாக கூறப்பட்டாலும், விந்தணு குறைபாட்டிற்கு மன அழுத்தம் காரணமாகிவிடமுடியாது, ஏனெனில் மனஅழுத்தம் இருந்தால் உடலுறவில் சரியாக ஈடுபட முடியாத காரணத்தால் தான் விந்தணுக்கள் வெளியேறுவதில் பிரச்சனை ஏற்படுகிறது.

ஊட்டச்சத்துக்களில் விட்டமின் சி, ஜிங்க், செலினியம், ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் போன்றவை விந்தணு உற்பத்திக்கு உதவுகின்றன. கைப்பேசி கதிர்வீச்சுகளால் ஆண்மை குறைபாடுகள் ஏற்படுகிறது என்று சொன்னாலும், அதனை நிரூபிக்கும் ஆய்வுகள் இன்னும் வெளியாகவில்லை.

உடல் சூடு ஒரு காரணமாக கூறப்படுவதால், சிலர் விதைப்பையை குளுமைப்படுத்தி விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி செய்வார்கள், ஆனால் இதனால் எவ்வித பலனும் இல்லை, அதற்கு மாறாக இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்த்தாலே போதுமானது.

வயதானவர்களுக்கு மட்டுமல்ல, இளம் வயதிலும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் ஆண்மை குறைபாடு ஏற்படும்.

மேலும் BMI எனப்படும் உடல் எடை அளவு கோளில் 20 – 25 எனும் அளவில் இருப்பவர்களுக்கு நல்ல விந்தணு உற்பத்தி இருக்கிறது, இதுவே உடல் பருமன் உள்ளவர்களுக்கு இது குறைவு என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.