ஆண்மை குறைவும், சிகிச்சை முறையும்

0
851

ஆண்மைக்குறைவு அமெரிக்காவில் 40 முதல் 70 வயது உள்ள ஆண்களுக்கு 52% பேரை பாதித்துள்ளது. இது இருதய நோயின் முன் அறிகுறியாக இருக்கக்கூடும். ஏனெனில் ஆண்மைக் குறைவுக்கும், மாரடைப்புக்கும் உள்ள காரணங்களில் பல ஒற்றுமைகள் உள்ளது.

இது இரத்த நாளத்தில் உள்ள குறைகளினாலோ, நரம்பு மண்டலத்தில் உள்ள குறைகளினாலோ, நாளமில்லா சுரப்பிகளில் உள்ள குறைகளினாலோ, மருந்தினாலோ அல்லது மனது ரீதியாக உள்ள பாதிப்பினாலும் ஏற்படக்கூடும்.

எதற்காக சிகிச்சை செய்ய வேண்டும்

1.மனதின் ஆரோக்கியத்திற்கு, 2. பெரிய நோய்களின் சிறிய வெளிப்பாடாக இருக்கலாம், 3. மிக எளிதில் சரி செய்யக் கூடியது, 4. குடும்பநலத்திற்கு.

வைத்திய முறைகள்

மருத்துவம் எந்த அளவு முன்னேறி உள்ளது என்றால் உடல் உறுப்புகளைக் கொண்டே ஆண்குறியை உருவாக்கி மேலும் அதை தாம்பத்தியதிக்கு உறவு கொள்வதற்கு ஏற்றாவறு செய்து கொள்ளும் அளவிற்கு முன்னேறி உள்ளது. எனவே தாம்பத்தியத்தில் சிக்கலானால் உண்டாகும் மனமுறிவுகளுக்கு இந்த சிகிச்சை முறை ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும்.

சிகிச்சை முறைகள்

  1. உடல் பரிசோதனைகள்:- மருத்துவர் ஆண் உறுப்பின் அமைப்பு மற்றும் வளர்ச்சியை கண்டறிதல்.
  2. மன பரிசோதனை:- மன ரீதியான தாம்பத்தியம் பற்றி தேவையில்லாத பயம், குழப்பம் இருந்தால் கண்டறிதல்.
  3. இரத்த பரிசோதனை:- இரத்தத்தில் சர்க்கரை நோய் மற்றும் சுரப்பிகள் செயல்பாட்டில் குறையிருந்தால் கண்டறிதல்.
  4. இரத்த ஓட்ட பரிசோதனை:- ஆண் உறுப்புக்கு தேவையான இரத்த ஓட்டம் இருக்கிறதா என்பதை அதன் இரத்த குழாய்கள் அடைப்பு /வீக்கம் பரிசோதனை செய்து கண் டறிதல்.
  5. RIGI ஸ்கேன்:- ஆண் உறுப்பின் விரைப்பு தன்மைதிறன் கண்டறியும் கருவி மூலம் கண்டறிதல்.

சிகிச்சை முறை

  1. உடற்பயிற்சி:- உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாக இருக்க யோகா, நடைபயிற்சி, தியானம் செய்தல்.
  2. உணவு பழக்கங்களை மாற்றுதல்:- கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்து காய்கறிகள், கீரைகள் மற்றும் தண்ணீர் அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.
  3. புகை பிடித்தல், பாக்கு, பான் மசாலா, மது கண்டிப்பாக கூடாது.

4.மருந்துகள்:- குறைபாடுகளுக்கு ஏற்றார் போல் மருந்துகள் மருத்துவர் பரிந்துரைபடி எடுத்து கொள்ள வேண்டும்.

  1. ஊசி மருந்துகள்:- சுரப்பிகளில் குறைபாடு ஏற்பட்டிருந்தால் சிறப்பு சுரப்பியல் மருத்துவர் நிபுணர்கள் பரிந்துரை படி ஊசி எடுத்து கொள்ள வேண்டும்.
  2. அறுவை சிகிட்சை:- சிறப்பு நுண்துளை ஆண்மை குறைவு சரி செய்யும் அறுவை சிகிட்சை மேற்கொள்ளுதல்.

Dr. C. பொன்ராஜ்M.B.B.S., M.S., MCh (Urology) DLS

பொன்ரா மருத்துவமனை – சுரண்டை அண்டு நெல்லை