அதிரடி முடிவெடுத்த நயன்தாரா – விக்னேஷ் சிவன்… விரைவில் முக்கிய அறிவிப்பு!

0
857

தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி, அடுத்ததாக நடித்துள்ள படம் ‘ராக்கி’. அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கி உள்ளார். இயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தர்புகா சிவா இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இப்படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா 2-வது அலை பரவல் தமிழகத்தில் தீவிரமடைந்து, திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் படத்தை ஓடிடி-யில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ராக்கி படத்தின் வெளியீடு குறித்து நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.