இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நிலமையினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, வழமை நிலையை முன்னெடுப்பதற்கான தீர்மானம் அரசாங்கத்தின் தனிப்பட்ட முடிவு மட்டுமல்ல, சுகாதார அதிகாரிகளின் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானமாகும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், தற்போதைய கொவிட் சூழ்நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி குறித்து கண்டியில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் நேரத்தில், படிப்படியாக நாட்டைத் திறப்பதே சிறந்த தீர்வு என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.