நாடாளுமன்ற வளாகத்தில் அமைதியின்மை.

0
371

பத்தரமுல்ல – ஜயந்திபுர, நாடாளுமன்றுக்கு செல்லும் வீதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த  வீதியில் பிரவேசிக்க முயன்றதையடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அத்தோடு, இந்த ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக ராஜகிரியவை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், ராஜகிரிய ஆயுர்வேத வைத்தியசாலை வளாகத்தில் இருந்து பத்தரமுல்லை நோக்கி பயணித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.