யாழில் ஒட்சிசன் தட்டுப்பாடு.

0
393

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன்  தட்டுப்பாடு  நிலவுவதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர்  சண்முகநாதன் சிறிபவானந்தராஜா குறிப்பிட்டுள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர்  சண்முகநாதன் சிறிபவானந்தராஜா மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நாளொன்றுக்கு 120 வரையான ஒட்சிசன்  சிலிண்டர்கள் இதுவரை பாவிக்கப்பட்டு வந்தது.

ஆனாலும் தற்போது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையினால், குறித்த சிலிண்டர் பாவனை 180க்கும் மேல்  அதிகரித்துள்ளது