தற்போது நாட்டில் டெங்கு நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் இந்த டெங்கு நுளம்புகள் உருவாகக்கூடிய இடங்களை கண்டறிவதற்கு மோப்ப நாய்களை உபயோகித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கண்டி மோப்ப நாய்கள் பிரிவின் ஜொனி மற்றும் ரோமா ஆகிய இரண்டு நாய்களுக்கும் உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் சுற்றாடல் பிரிவு காவல்துறை அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு குறித்த மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.