பனாமா கொடியுடன் கப்பலொன்று ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய குறித்த கப்பல் ஹோமுஸ் நீரிணை அருகில் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் துபாய் நிறுவனமொன்றிற்கு சொந்தமான எம்.வீ.அஸ்ப்ளட் ப்ரின்சஸ் என்ற கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் கடத்தப்பட கப்பல் ஈரான் நோக்கி பயணிக்க வேண்டும் எனவும் ஆயுததாரிகளால் கட்டளையிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.
மேலும் குறித்த கடத்தல் சம்பவமானது ஈரான் இராணுவத்தினாரால் முடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த குற்றச்சாட்டினை ஈரான் நிராகரிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.SHARE0