உத்தேச கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் தொடர்பில் வெளியான தகவல்!

0
340

எதிர்வரும் 6ஆம் திகதி நாடாளுமன்றில் உத்தேச கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற மாட்டாது என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த சட்டமூலம் எதிர்வரும் 6ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என நாடாளுமன்றில் முன்னதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் சமல் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்திருந்தார்.

மேலும் குறித்த சட்ட மூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நடத்துவதற்கு மேலும் கால அவகாசம் வேண்டும் எனவும் சமல் ராஜபக்ச சபையில் தெரிவித்திருந்தார்.