மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் விபத்து – இருவர் படுகாயம்.

0
329

மட்டக்களப்பு- கல்முனை பகுதி வீதியின் கிராங்குளத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்து சம்பவ இடத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்முனை பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிள் பயணித்து கொண்டிருந்த வேளை எதிரே சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் சடுதியாக திரும்புவதற்கு முட்படடாவேலை இரு மோட்டார் சைக்கிள்களும் ஒன்றோடு ஒன்று மோதியதால் விபத்து இடம்பெற்றுள்ளது .

இதில் மோட்டார் சைக்கிளைச் ஓட்டி சென்ற இருவரும் காயங்களுக்குட்பட்டு ஆரையம்பத்தி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்கும் பலத்த பாதிப்பு எட்டப்பட்டுள்ளது .

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.