இலங்கை முழுவதும் பரவிய டெல்டா வைரஸ் – பெரும் ஆபத்தான கட்டத்தில் நாடு?

0
216

இலங்கை முழுதும் வலுவடைந்து டெல்டா வைரஸ் பரவியுள்ளமையால் அதிகளாவான தொற்றாளர்கள் இனங்கனப்பட்டு காணப்படுவதாக சுகாதார துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அண்மை நாட்களில் அடையாளம் காணப்படும் கொவிட் தொற்றாளர்களில் அதிகமானோர் டெல்டா தொற்றாளர்கள் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவன்தர கூறியுள்ளார்.

நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரி பரிசோதனைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதென அவர் குறிப்பிட்டார்.

94 மரபணு மாதிரிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட பரிசோதனைகளில் இந்த விடயம் கண்டுபிடிக்ப்பபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்களில் அதிகமானோர் டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான முக்கிய அறிக்கை ஒன்று சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்