வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒட்சிசன் தேவை அதிகரிப்பு.

0
315

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்கள் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் கலைநாதன் ராகுலன் கூறியுள்ளார்.

நாட்டின் பல பகுதிகள் உட்பட வவுனியா மாவட்டத்திலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

எமது வைத்தியசாலையில் சாதாரண நோயாளர்கள் மட்டும் பயன்படுத்திய ஒட்சிசன் இப்போது கொரோனா தொற்றாளர்களுக்கும் பயன்படுத்த வேண்டிய நிலமை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக வைத்தியசாலையில் ஒட்சிசன் தேவை அதிகரித்த வண்ணமேயுள்ளது.

எனினும், எமது வைத்தியசாலையில் த இப்போதைய தேவையாக ஒட்சிசன் சிலிண்டர்கள் காணப்படுகின்றன.

இருப்பினும் மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதோடு மத்திரமல்லாமல் சுகாதார நடைமுறைகளை இடைவிடாது பின்பற்றுவது தங்களையும் தமது மாவட்டத்தையும் பாதுகாப்பானதாக வைத்திருக்க உதவும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்