இளம் குடும்பஸ்தரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.

0
355

வவுனியா, வேப்பங்குளம், 6ம் ஒழுங்கைக்கு முன்பாகவுள்ள வீதியில் அண்மித்த வர்த்தக நிலையத்திற்கு அருகேயுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்றை இன்று பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

இதன் வீதியில் அதிகாலையில் பயணித்த பொதுமகன் ஒருவர் சடலத்தினை பார்த்ததும் உடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வவுனியா பொலிஸார் சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

35 – 45 வயதுக்குட்பட்ட நபரே இவ்வாறு சடலமாக காணப்பட்டதுடன், அவரின் மரணம் குறித்த மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன..