கொவிட் தொற்றின் மூன்றாம் அலையின் தாக்கம் பாரிய அளவில் தீவிரமடைந்து வருகிறது – குழந்தைகளுக்கே பாதிப்பு அதிகம்.

0
309

இந்தியாவில் கொவிட் தொற்றின் மூன்றாம் அலையின் தாக்கம் தற்போது தீவிரம் பெற்று வருவதாக மருத்துவ நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கமைய ஒக்டோபர் மாதம் இந்த கொவிட் தொற்றின் மூன்றாவது அலை பாரியளவிலான உச்சத்தை எட்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த மூன்றாவது அலையின் மூலம் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

அந்த வகையில் கொவிட் தொற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கு விசேட பணி குழுவையும் அமைத்துள்ளது.

இவ்வாறு நியமிக்கப்பட்ட குழுவின் 13 பேரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இவ்வாறு நியமிக்கப்பட்ட குறித்த குழுவினரால் கொவிட் தொற்றிலிருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது போன்ற வழிமுறைகள் குறித்தும், அவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகள் குறித்தும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் அரசுக்கு ஆலோசனை வழங்கப்படும் எனவும் சுடிக்காட்டப்படுள்ளது.