காட்டு பகுதியில் இருந்து சில அபாயகரமான பொருட்கள் மீட்பு!

0
359

கிளிநொச்சி மாவட்டம் – பிரமந்தனாறு மயில்வாகனப் புரம் காட்டு பகுதியில் இருந்து சில அபாயகரமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய குறித்த பொருட்கள் தர்மபுரம் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 200 துப்பாக்கி ரவைகளும், 25 மூட்டைகளில் கட்டப்பட்ட பாவித்த ரவை வேற்று கூடுகளுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையசந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரைரிடமும் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதுடன் குறித்த நபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.