காவல்துறை படை தலைமையகத்தில் இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும்.

0
334

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அஸ்ராசெனெகா இரண்டாம் 2 ஆம் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் பம்பலப்பிட்டிய காவல்துறை படை தலைமையகத்தில் இரண்டாவது தடுப்பூசி செலுத்த முடியும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்காக வருகை தருவோர் அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி அட்டையை அவசியம் கொண்டு வர வேண்டும் என அவர் அறிவித்துள்ளார்