இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை! ஜெசிந்தா லாசரஸ் உறுதி?

0
288

இந்திய குடியுரிமை வேண்டும் என்பதே, இலங்கைத் தமிழர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. இவர்களுக்கு கல்விக் கடன் வழங்க, வேலைவாய்ப்பு முகாம் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அகதிகள் மறுவாழ்வு நலத்துறை இயக்குநர் ஜெசிந்தா லாசரஸ் குறிப்பிட்டுள்ளார் .

புதுக்கோட்டை மாவட்டத்தில் தோப்புக்கொல்லை, தேக்காட்டூர், அழியாநிலை போன்ற இடங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் ஜெசிந்தா லாசரஸ் நேற்று ஆய்வு செய்தார்.

இதன் பொது இந்திய குடியரிமை வழங்க வேண்டும். குடிநீர், மின்விளக்கு, சாலை வசதி, வீடு, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர், தோப்புக்கொல்லை அகதிகள் முகாமில் ஊடகவியலாளர்களிடம் பேசிய ஜெசிந்தா லாசரஸ், தமிழக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து சலுகைகளும் இலங்கை அகதிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

குடியுரிமை வேண்டும் என்பதுதான் இலங்கைத் தமிழர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

இவர்களுக்கு கல்விக் கடன் வழங்க, வேலைவாய்ப்பு முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதேபோல, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு எதிர்புறம் உள்ள இலங்கை அகதிகள் முகாமிற்கும் இவர் நேரில் சென்றுள்ளார்.

அங்கும், “இந்திய நாட்டின் குடியுரிமை, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை” இலங்கை அகதிகள் வலியுறுத்தினர்.