தடுமாற்றத்தில் கோட்டாபய -வெளிவந்த விமர்சனம்.

0
327

கோட்டாபய அரசாங்கம் நேர்மையான நோக்ககத்துடன் செயற்படுவதாக உரிமைகோரிக்கொள்கின்ற போதிலும், அதன் மோசமான செயற்பாடுகளுக்கு பிரயோகிக்கப்படக்கூடியதாகும்.’ செயல்வீரர்’ என்றும் ( புலிகள் இயக்கத்தை ஒழித்தமைக்காக)’ ஒழித்துக்கட்டுபவர்’ என்றும் புகழப்படுகின்ற அவர் தேர்தலுக்கு முன்னதாக உறுதியளித்த ‘ சுபிட்சமும் சீர்மையும் கொண்ட எதிர்காலத்தை ‘ நாட்டு மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுப்பதில் தொடர்ந்து தடுமாறிக்கொண்டிருக்கிறார் என இந்திய இராணுவ அதிகாரியும் அரசியல் விமர்சகருமான கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய தனக்கு விருப்பமான இராணுவ அதிகாரிகளை மேற்பார்வை குழுக்களின் தலைவர்களாகவும் நிர்வாக பதவிகளுக்கும் நியமித்துக்கொண்டு ஏற்கெனவே நாட்டை நிருவகித்துக்கொண்டுவருகிறார்.

கிரிமினல் நடவடிக்கைகளுக்காக குற்றவாளிகளாகக் காணப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு மன்னிப்பு அளித்திருக்கும் ஜனாதிபதி அத்தகைய நடவடிக்கைகளுக்காக ஆயுதப்படைகளின் அதிகாரிகள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுகிறார்.

இவையெல்லாம் அவரது தலைமைத்துவத்தின் கீழ் நிருவாகம் இராணுவமயப்படுத்தப்படுகின்றது என்ற பரந்தளவு சந்தேகத்தை கிளப்பியிருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.