யாழில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சூத்திரதாரி கைது.

0
433

யாழில் வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், யாழ்ப்பாணம் – அளவெட்டி, நாகினாவத்தை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் நேற்று முன்தினம் (09) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி கைதானவர் யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுகளில் பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் என பொலிஸார் கூறியுள்ளதுடன், குறித்த நபரிடமிருந்து 2 வாள்கள் மற்றும் சந்தேக நபரால் கொள்ளையிடப்பட்ட இலக்க தகடற்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.