புகையிரதத்தில் பயணிப்பவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

0
783

புகையிரதத்தில் பயணம் செய்யும் போது அலுவலக அடையாள அட்டை அல்லது உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் மாகாணங்களுக்குகிடையில் பயணம் மேற்கொள்ள முடியாது என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய வேலைக்கு செல்வோருக்கான புகையிரத பயணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த ஆவணங்களை எந்த நேரத்திலும் பரிசோதனை செய்து உரிய நடவடிக்கை எடுத்து கொள்ளுமாறு புகையிரத ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.