வவுனியா மாவட்டம் ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த பெண் தனது வீட்டில் நேற்றைய தினம் இரவு உறங்கச் சென்றுள்ளார்.
இன்று காலை முதல் குறித்த பெண்ணை காணாத நிலையில் உறவினர்கள் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அந்தப் பெண் அருகில் உள்ள கிணற்றில் உள்ளமை கண்டறியப்பட்டது.
அத்துடன் 19 வயதுடைய மோகன் திலக்சனா என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது