ஆண்மையை அதிகரிக்க, உயிரணுக்கள் வலிமை பெற உதவும் முருங்கை

0
1013

இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் எல்லாருக்கும் தந்திருக்கிறது. அலுவலகத்தின் அறைகளுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபடுவதும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது நமது வாழக்கை.

இந்த வாழ்க்கை முறைக்கும் குழந்தையின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு விந்தணுக்கள் வலுவற்றிருப்பதே இன்றைக்கு குழந்தையின்மைப் பிரச்சனை எங்கும் தழைத்து வளர்வதன் முக்கிய காரணம்.

விந்தணுக்கள் வலிமை இழக்க முக்கியமான ஒரு காரணம் உடலில் ”வைட்டமின் டி” குறைவது. தேவையான அளவு ”வைட்டமின் டி” உடலில் இருக்கும் போது விந்தணுக்கள் வலிமையடைகின்றன. சூரிய ஒளியில் ”வைட்டமின் டி” உள்ளது.

அலுவலக அறைகளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பவர்கள் அவ்வப்போது எழுந்து சாலையோர டீ கடைக்குச் சென்று சுடச்சுட டீயும், வைட்டமின் டீயும் பெற்றுக் கொள்வது ஆரோக்கிய வாழ்வுக்குச் சிறந்தது.

புகை, மது, காபி போன்றவற்றை உட்கொள்ளாமலும் அளவான உடற்பயிற்சி மேற்கொள்வதும் என உடலை ஆரோக்கியமாய் காத்துக் கொள்ளும் ஆண்கள் கொஞ்ச நேரம் வெயிலிலும் நடந்து வந்தால் வாழ்க்கை சந்தோஷமாகவும் அமையும்….

ஆண்தன்மை அதிகரிக்க முருங்கை :

ஆண்மை விருத்திக்கு முருங்கையும், மூலிகையும் இன்று கடைகளில் விற்பனையாகும் மருந்துகளைக் விட இரண்டல்ல பத்தல்ல. ஆயிரம் மடங்கு சிறந்தவை, உயர்ந்தவை, உகந்தவை.

முருங்கையின் அனைத்து உறுப்புகள் மற்ற மருந்துப் பொருளோடு சேர்ந்தால் வயகராவை விட பன்மடங்கு பயனளிக்கிறது.

ஆண்தன்மை அதிகரிக்க : முருங்கைக் கீரை, முருங்கைப்பூ, இவ்விரண்டும் சம அளவில் சேர்த்து, சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்க்கடலையை வறுத்துப் பொடி செய்து, தூவி உணவுடன் சேர்த்துண்ண ஆண்தன்மை அதிகரிக்கும்.. விரைப்பு நீடிக்கும், வேகமும் பெருகும், வானளவு இன்பத்தைப் பெண்ணுக்கு வாரி வழங்கிட ஆண்தன்மை வந்து துள்ளும். கீரையும், பூவும் சம அளவில் சேர்த்து, வேகவைத்து கடைந்து குழம்பாகவும் உபயோகிக்கலாம்.