வெலிசரை வீதியில் கடுமையான வாகன நெரிசல்!

0
331

அதிபர் ,ஆசிரியர் தொழிற்சங்கங்கத்தினர்
வேதனை பிரச்சினைகள் உள்ளிட்ட தமது கோரிக்கைகளை உடனடியாகவே நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிட்டு நான்கு பகுதிகளில் இருந்து வாகன பேரணியை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கமைய குறித்த வாகன பேரணி இன்று முற்பகல் நீர்கொழும்பு வீதியின் வெலிசரை, கண்டி வீதியின் கடவத்த அதிவேக வீதி நுழைவாயில், அத்துடன் ஹை லெவல் வீதியின் கொட்டாவை, காலி வீதியில் மொரட்டுவை ஆகிய பகுதிகளிலேயே ஆரம்பமாகியது.

அத்துடன் இவ்வாறு இடம்பெறும் பேரணி கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த வாகன பேரணிகள் பயணிக்கும் பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் இடம்பெற்றுள்ளதாக தகவல் எமது செய்தியாளர் குறிப்பிடுள்ளார்.