இலங்கையில் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களை தடை செய்ய வேண்டும் என அமைச்சர் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு எவ்வித சட்டமும் இல்லாமையினால் அதனை தடை செய்வதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். “தற்போது நாட்டில் என்ன நடக்கிறது என்பதற்கு சமூக ஊடகங்கள் பொறுப்புக்கூற வேண்டும்.
இந்த சூழ்நிலையில் சமூக வலைத்தளங்களை உரிய முறையில் ஒழுங்குபடுத்த சட்டங்களை கொண்டு வர வேண்டும். இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் ஒவ்வொரு நாளும் இதைப் பற்றி பேசுகிறேன்.
நாங்கள் கடையைத் திறந்து வைத்தோம். ஏதாவது நடக்கும்போது தான், என்ன செய்வத என்று பார்க்கிறோம். ஏதாவது நடக்கும்போது, என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறோம். இந்த சமூக ஊடகங்களை நாட்டில் தடை செய்ய வேண்டும். அல்லது அவற்றை ஒழுங்குபடுத்த சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். சீனாவில் சமூக ஊடகங்கள் இல்லை. அங்கு சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டுள்ளது” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.