சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளுக்காக மாத்திரம் குறிப்பிட்ட ஒரு தினத்தினை ஒதுக்குவதற்கு நிதி சேவைகள் ஆணைக்குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் முதித விதான பத்திரன குறியுள்ளார் .
குறித்த தினத்தில் சிறுவர் தொடர்பான வழக்குகளுக்கு முன்னுரிமையளித்தல் மற்றும் இவ்வாறான வழக்குகளை அடையாளம் காண்பதற்கான முறைகளை உருவாக்குதல் போன்ற விடயங்களை உள்ளடக்கிய சுற்றறிக்கை சகல நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த நிதி சேவைகள் ஆணைக்குழுவினால் அனுப்பப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுவர்களை நீதிமன்றுக்கு அழைக்காமல் வேறு இடங்களில் வைத்து தொலைக்காணொளியுடாக சாட்சிகளைப் பதிவு செய்வதற்கான மத்திய நிலையங்கள் அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன் பிரகாரம் சகல மாகாணங்களிலும் 9 மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது