காய்ச்சல் உள்ளவர்களுக்கு அவசர அறிவுறுத்தல் – 10 மாவட்டங்கள் அபாய வலயங்களாக அடையாளம்.

0
345

இரண்டு நாட்களுக்கும் மேல் காய்ச்சல் இடுப்பின் உடனடியாக வைத்திய ஆலோசனை​யை நாடுமாறு நாட்டு மக்களுக்கு அவசர அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தை கூறியுள்ளார் .

அத்துடன், டெங்கு காய்ச்சல் கோவிட்டை போன்றது இல்லை. சமூக இடைவௌியை கடைபிடிப்பதாலும் அதில் இருந்து பாதுகாப்பு பெற முடியாது எனவும் கூறியுள்ளார்.

அதேவேளை நாட்டில் டெங்கு அபாயமிக்க வலயங்களாக 10 மாவட்டங்கள் அறிவிக்கப்படடதை அடுத்து சுகாதார அமைச்சு கூறுயுள்ளார்.

இது தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தேசிய டெங்கு ஒழிப்பு பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.