களுபோவில வைத்தியசாலையின் நிலை தொடர்பில் ஊடகவியலாளரொருவர் படங்களுடன் முகப்புத்தகத்தில் இட்ட பதிவொன்று தற்பொழுது வைரலாகி வெளி வந்துள்ளது .
அதன்படி குறித்த பதிவில்,
கோவிட் தொற்றுக்கு உட்படுத்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நீண்ட வரிசை காணக்கூடுயதாகவும் , சில மணித்தியாலங்களுக்குள்ளேயே இருவர் கண்முன்னே இறந்து விட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பற்றி படித்த செய்திகளை இப்போது நாமும் நேரில் பார்க்க முடிவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
வார்டில் ஒரு கட்டிலில் இரண்டு அல்லது மூன்று தீவிர நோயாளிகள் இருக்கிறார்கள்,
மீதமுள்ள நூற்றுக்கு மேலான நோயாளிகள் நீண்ட இருக்கைகளிலும், நாற்காலிகளிலும், மரங்களின் கீழும் மணல் தரையில் படுத்திருக்க வேண்டிய நிலை ஏட்பட்டுள்ளதினையும், சிலர் போர்வை கூட இல்லாமல் படுத்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது .
எனவே மக்களை கோவிட் தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்து கொள்ள மிகவும் அவதானம் இருக்குமாறு அந்த பதிவில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த சில நாட்களாக இலங்கையில் கோவிட் தொற்றுக்கு உள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் கோவிட் உயிரிழப்புக்களின் தொகை அதிகரித்துள்ளதாகவும், நாட்டில் நிலை வலு பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்க