கொரோனாவின் அடுத்த அலை தொடர்பில் அச்சம் வேண்டாம்.

0
343

கொரோனா எத்தனை அலைகள் எழுந்தாலும் கவலைப்பட வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவின் இரண்டாவது அலை முடிவடைந்தாலும், அடுத்த அடுத்த அலைகள் குறித்த அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவர்கள், கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை கணித்த ஹைதராபாத் மற்றும் கான்புர் ஐஐடி ஆய்வாளர்கள், மூன்றாவது அலை ஒக்டோபரில் வரலாம் எனக் கூறுகின்றனர்.

சில மாநிலங்களில் இப்போதே சிறிய அளவிலான எண்ணிக்கை கூடியிருப்பதும் மூன்றாவது அலையின் தொடக்கமாகவே கருதலாம் எனத் தெரிவித்துள்ளனர்.