யாழ்ப்பாணத்தில் வீதியால் சென்ற நபரை கட்டி வைத்து தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதற்கமைய குறித்த சம்பவம் இன்று காலை ஐந்து முப்பது மணி அளவில் வட்டுக்கோட்டை டச் வீதியில் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் அதிகாலையில் வீதியால் சென்ற நபரை மூன்று நபர்கள் வழிமறித்து எங்கே செல்கிறார் என விசாரித்து விட்டு வீதியில் கட்டிவைத்து தாக்கிய பின்னர் குறித்த மூன்று நபர்களும் தப்பிச் சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த நபரை அந்த பிரதேச இளைஞர்கள் மீட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.