தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் சிலர் கைது!

0
378

நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில்123 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இவர்கள் அனைவரும் மாகாண எல்லைகளை கடந்தமை மற்றும் முகக்கவசம் அணியாமை போன்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 53,266 ஆக உயர்வடைந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.