அவசரகால நிலையை பிரகடனப்படுத்திய கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனை.

0
311

நாட்டில் தற்போது கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையும் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

அத்துடன் இந்த வைத்தியசாலையிலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு கண்டி பொது வைத்தியசாலையிலும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அங்கு அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படுவதினால் தெல்தெனிய மருத்துவமனையிலும் குறித்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.